திருச்சி ஜூன் 3: திருச்சியில் புகையிலை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு கடந்த 1ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு ரோந்து சென்று அப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் தென்னூர் காய்தே மில்லத் நகரை சேர்ந்த அப்துல் பசித் (39) என்பதும், அவர் அங்கு புகையிலை விற்றதும் தெரிந்தது. கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 420 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
குட்கா விற்றவர் வாலிபர் கைது
0