திருவெறும்பூர், ஜூன் 18: திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சக போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்பொழுது தெற்கு மலை சமாதானபுரம் பகுதியில் முகமது இஸ்மாயில் (42) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றுக்கொண்டு இருந்தபோது கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து 9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடுமுகமது இஸ்மாயிலையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குட்கா விற்றவர் கைது
0
previous post