காரிமங்கலம், ஆக.29: காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதன் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானுசுஜாதா தலைமையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அதிகாரிகள் காரிமங்கலம், கெரகோடஅள்ளி, பொன்னேரி, பெரியாம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊறுகாய், சிப்ஸ் தயாரிக்கும் கடைகள், மளிகை கடை, பேக்கரி ஆகியவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மளிகை கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளருக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனர். மேலும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய மளிகை கடை, பேக்கரி மற்றும் உணவகம் உட்பட 3 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் அபராதம், சமையல் எண்ணெயை பலமுறை பயன்படுத்திய ஓட்டல், பேக்கரி கடைக்கு ₹1000 அபராதம் விதிக்கப்பட்டது.
குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல்
previous post