ஆத்தூர், நவ.10: ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம், மல்லியகரை, தென்னங்குடி பாளையம், கல்லாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஆத்தூர் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. நேற்று ஆத்தூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கைகளில் ஈடுபட்ட போது, போலீசாரை கண்டதும், டூவீலரில் வந்த 2பேர் திருப்பி கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அதேபோல் ஆம்னி வேனில் வந்த ஒருவரும் வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பி செல்ல முயன்றார். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனத்தில் சோதனை செய்தபோது, அதில், குட்கா இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கோவர்தன்(50), கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த யோகபிரகாஷ்(24), தென்னங்குடி பாளையம் கிராமத்தை சேர்ந்த ரத்தினகுமார்(47) என்பது தெரிய வந்தது. 3பேரையும் ைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 40 கிலோ குட்கா, 2டூவீலர்கள், ஒரு காரை பறிமுதல் செய்தனர். பின்னர் 3பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
குட்கா கடத்திய 3பேர் கைது 40 கிலோ பறிமுதல்
0
previous post