கரூர், ஜூலை 16: தாந்தோணிமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக கார்பெண்டர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் தாந்தோணிமலை அடுத்துள்ள தென்றல் நகரைச் சேர்ந்தவர் சுதாகர்(45). கார்பெண்டர் தொழில் செய்து வந்தார்.
இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மனநிலையில் இருந்து வந்த சுதாகர், கடந்த 13ம் தேதி மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.