Wednesday, February 28, 2024
Home » குடுமியான் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு களப்பயணம்

குடுமியான் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு களப்பயணம்

by Arun Kumar

 

அறந்தாங்கி, பிப்.8: அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வேளாண் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் அறிவியல் ஆய்வகங்களில் ஒரு நாள் களப்பயணம் மற்றும் பயிற்சி முகாம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் குடுமியான்மலையில் நடைபெற்றது.இந்த களப்பயணத்தில் மாணவர்கள் குடுமியான்மலையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு வகையான அமைப்புகளையும் வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் ஆகியவற்றினை நேரடியாக கண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் முன்னிலை வகித்தார்.பயண ஏற்பாட்டினை பள்ளி வேளாண் ஆசிரியர் ரஞ்சித் குமார் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனர் நிகில் குணால் ஆகியோர் செய்து இருந்தனர்.

You may also like

Leave a Comment

11 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi