வேலூர், ஜூன் 19: காட்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டனர். காட்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி அருகே உள்ள ஊர்களுக்குள் வருகிறது. அவ்வாறு வரும் மான்களை நாய்கள் கடித்து குதறிவிடுகிறது. மேலும் வாகனங்களில் சிக்கியும் இறந்து விடுகிறது. இந்நிலையில் காட்பாடி அடுத்த செஞ்சிமோட்டூர் பகுதிக்கு நேற்று முன்தினம் தண்ணீர் தேடி 2 வயது புள்ளிமான் குடியிருப்புக்குள் வந்தது. இதனைகண்ட ஊராட்சி மன்ற தலைவர் காட்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனச்சரகர் கந்தசாமி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளிமானை மீட்டு பனமடங்கி வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
குடியிருப்பு பகுதியில் புகுந்த புள்ளிமான் மீட்பு
0