வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் சிரசு திருவிழா கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இதில் திருவிழாவை காண வந்த பக்தர்களின் ஏராளமான பைக்குகள் திருட்டு போனது. இதுகுறித்து பைக் உரிமையாளர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்கள். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடி சென்ற நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் குடியாத்தம் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்துக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பைக்குகள் திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 5 இருசக்கர பைக்குகள் பறிமுதல் செய்தனர் இதுெதாடர்பாக 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளி வெங்கடேசன் (19) ஆகிய இருவரை குடியாத்தம் டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்