விராலிமலை,ஆக.13: விராலிமலையில் சுயமரியாதை இயக்கம், குடியரசு நூற்றாண்டு விழா திராவிடர் கழக பொதுக்கூட்டம் செக்போஸ்ட்டில் நடைபெற்றது. விராலிமலை செக்போஸ்ட் அண்ணா சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு விராலிமலை ஒன்றிய தலைவர் ஓவியர் குழந்தைவேல் தலைமை வகித்தார். இதில் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் செந்தூரப்பாண்டியன் தொடக்க உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திராவிடர் துணை பொதுச்செயலாளர் செ.மே.மதிவதனி பேசினார். கூட்டத்தில் மாவட்ட காப்பாளர் சுப்பையா,மாவட்ட தலைவர் அறிவொளி,மாவட்ட செயலாளர் வீரப்பன், மாநில அமைப்பாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் மகளிர் கழக பொறுப்பாளர் புனிதா நன்றி கூறினார்.