Wednesday, February 21, 2024
Home » குடியரசு தின விழாவை முன்னிட்டு ரயில் நிலையம், பூங்கா, படகு இல்லம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு ரயில் நிலையம், பூங்கா, படகு இல்லம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

by MuthuKumar

ஊட்டி, ஜன.25: குடியரசு தின விழாவை முன்னிட்டு சுற்றுலா நகரமான நீலகிரியில் ரயில் நிலையம், பூங்கா, படகு இல்லம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் உள்ளதால், எப்போதும் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக காணப்படும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், ரயில் நிலையம், மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தாவரவியல் பூங்கா உட்பட முக்கிய சுற்றுலா தலங்களில் வெடிகுண்டு சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

இவர்கள், மோப்பநாய் மற்றும் வெடி பொருட்களை கண்டறியும் கருவி கொண்டு சுற்றுலா தலங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக – கர்நாடக மாநில எல்லையான கக்கநல்லா சோதனை சாவடி, தமிழக – கேரள எல்லைகளான நாடுகாணி, சேரம்பாடி, தாளூர் உட்பட முக்கிய சோதனை சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், நீலகிரி மாவட்டத்தின் எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் போர்வையில் யாரேனும் விஷமிகள் ஊடுருவக்கூடும் என்பதால் அனைத்து லாட்ஜ், காட்டேஜ், ரிசார்ட்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 24 மணி நேரமும் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் அறைகள் கேட்டு லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களுக்கு வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினம் நடக்கும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

14 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi