சிவகாசி, ஜூன் 26: மது குடிப்பதை கண்டித்ததால் சிவகாசி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் அம்மன்மேட்ச் நகரை சேர்ந்தவர் ராஜா(37). இவருக்கு திருமணமாகி ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஜீவிகா, மதி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாளியான ராஜா கிடைக்கும் வருமானத்தை மதுகுடிக்க செலவு செய்து வந்துள்ளார்.
இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.