திருச்சி ஆக.12: குடிப்பதற்கு பணம் கேட்டு பெண்ணிடம் தகராறு செய்த மாநகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருச்சி புத்தூர் தெற்கு எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சரண்யா (33) இவர் புத்தூர் நான்குரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உய்யக் கொண்டான் திருமலை பகுதி சுப்புராஜ் நகரை சேர்ந்த நித்தியானந்தம் (38) சரண்யாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் போில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து நித்தியானந்தத்தை கைது செய்தனர். மேலும் விசாரனையில் இவர் திருச்சி மாநகராட்சியில் சுகாதார பணியாளராக பணிபுரிந்து வருகிறார் என தெரியவந்தது.
குடிப்பதற்கு பணம் கேட்டு பெண்ணிடம் தகராறு செய்த மாநகராட்சி ஊழியர் கைது
previous post