பண்ருட்டி, நவ. 18: பண்ருட்டியை அடுத்த மேல் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி உஷா (27). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடித்து விட்டு வந்த அதே ஊரை சேர்ந்த பாலு (50) என்பவர் குடிபோதையில் அசிங்கமாக பேசியுள்ளார். இது குறித்து காடாம்புலியூர் போலீசில் உஷா புகார் கொடுத்தார். புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.