சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே கூவர் கூட்டம் கிராமத்தில் கண்காணி ப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் ஏ.எம்.டி. அறக்கட்டளை சார்பில் நடிகர் அருண்மொழி தேவன் ஏற்பாட்டில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா முதுகுளத்தூர் டிஎஸ்பி சண்முகம் தலைமையில் நடந்தது.அப்போது கண்காணிப்பு கேமரா அறையை திறந்து வைத்து, அதன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டார்.
அங்கு கூடி இருந்த கூவர்கூட்டம் கிராமத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று எங்கள் கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏதும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றோம் என கிராம மக்கள் டிஎஸ்பியிடம் முறையிட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவிப்பதாக டிஎஸ்பி சண்முகம் கூறினார். உடன் கூவர்கூட்டம் கிராம மக்கள் பலரும் இருந்தனர்.