காங்கயம், ஏப். 4: வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு வெள்ளகோவில், தாராபுரம், திருப்பத்தூர், பழனி, லாலாபேட்டை, திருச்சி, கரூர், காங்கயம், பகுதி விவசாயிகள் 108 பேர், 800 மூட்டை கொப்பரகைளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில், முத்தூர், காங்கயம், ஊத்துக்குளி ஆர்எஸ், ஈரோடு, நஞ்சை ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் 10 பேர் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.92.30க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.60.89க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 45 ஆயிரம் கிலோ கொப்பரை ரூ.35 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
குடிநீர் பகுப்பாய்வு அதிகாரிகள் விளக்கம் ரூ.35 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
55