அரூர், மே 14: அரூர் ஒன்றியம், மத்தியம்பட்டி ஊராட்சி சந்திராபுரத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சம்பத்குமார் எம்எல்ஏ பங்கேற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அரூர் ஒன்றிய அதிமுக செயலாளர் பசுபதி, மாவட்ட துணை செயலாளர் செண்பகம் மற்றும் நிர்வாகிகள் சந்தோஷ், பாஷா, ஏகநாதன், ராஜா, சுபான், ராமஜெயம், முருகன், மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா
0
previous post