சேலம்: சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 4 நாட்களுக்கு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில், இன்று முதல் வரும் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால், மாநகராட்சிப் பகுதிகளில் இன்று முதல் 17ம் தேதி வரை குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.