விருதுநகர், ஆக.30: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விருதுநகர் நகராட்சி பகுதியில் நேற்று காலை ஆய்வு செய்தார். விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் நீரில் கலந்துள்ள குளோரின் மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பாக நேரில் பார்வையிட்டார். அகமது நகர் மேல்நிலைத்தொட்டி வளாக சமுதாய கூடத்தில் நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 8 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்ட உணவின் தரத்தை நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், விருதுநகர் மதுரை சாலையில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீரில் கலந்துள்ள குளோரின் அளவு மற்றும் குடிநீர் விநியோகம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் நகராட்சி ஆணையர் தமிழ் செல்வி, நகராட்சி பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ், சுகாதார அலுவலர் இளங்கோவன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.