திருவாரூர், ஆக. 24:குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் நேற்று நடத்திய சோதனையில் அங்குள்ள சுடுகாடு ஒன்றின் அருகே சூரியமண்டப தெருவை சேர்ந்த சாமிதுரை மகன் பரணிதரண் (30) என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்ததன் பேரில் அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ 11 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 300 கிராம் எடையிலான கஞ்சாவை பறிமுதல் செய்த நிலையில் ஏற்கனவே அவர் மீது 3 கஞ்சா வழக்குகள் மற்றும் 7 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதேபோல் பெருகவாழ்ந்தானில் துக்க நிகழ்ச்சி ஒன்றின் போது கொலை மிரட்டல் விடுத்தாக பாலையூர் கொம்புகாரன் தெருவை சேர்ந்த ராசப்பா மகன் அசோக்குமார் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.