மதுரை, ஜூலை 5: மாடுகளின் குடற்புழு நோய் தடுப்பு குறித்து கால்நடைத்துறை பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘மாட்டு கொட்டகைகளில் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். சாணம் மற்றும் அசுத்தங்களை முறைப்படி அகற்ற வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சாணப்பரிசோதனை செய்து ஒட்டுண்ணி இருந்தால் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீர் ெதாட்டிகளைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மாடுகளை வயதின் அடிப்படையில் பிரித்து அடைக்க வேண்டும். புதிய மாடுகள் வாங்கினால் குடற்புழு நீக்க மருந்துகள் கொடுக்க வேண்டும். மேய்ச்சல் தரைகளை அடிக்கடி மாற்றுவதுடன், அதிகாலை மற்றும் மாலையில் மேய்ச்சலுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும். பண்ணைக்குள் பிற விலங்குகள் மற்றும் பறவைகள் வருவதை தடுக்க வேண்டும்’’ என்றனர்.