கும்பகோணம், ஜூன் 28: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் மாநகரில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 4ம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணியளவில் குடந்தை காந்தி பார்க் அருகில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அமைப்பு செயலாளர் ஆர்.மனோகரன் தலைமையிலும், கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதி மோகன், மாநகர செயலாளர் ராம.ராமநாதன், கொள்கை பரப்பு துணை செயலாளர் ரதிமீனா பி.எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளார்.