கீழ்வேளூர், ஆக. 22: கீழ்வேளூர் அருகே டிரான்ஸ்பார்மரில் பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்மாற்றியை உடைத்த ரூ.75ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலம், இலுப்பூர் சத்திரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கு கடந்த 20 நாட்களுக்கு முன் மின்மாற்றி மற்றும் அதை பொருத்துவதற்கான இரும்பு ஆங்கில்கள் இறக்கி வைக்கப்பட்டு கடந்த வாரம் இரும்பு ஆங்கில்கள் பொருத்தப்பட்டது.
தொடர்ந்து பணிகள் நடைபெறுவதற்காக சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த மின்மாற்றியை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் மின்சார வாரிய இளநிலை மின் பொறியாளர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.