கீழ்வேளூர்,ஆக.28: நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திருப்பூண்டியில் நடைபெற்றது. பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன் வரவேற்றார். ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், அனுசியாஜோதிபாசு, பொருளாளர் முருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தலைவர் கவுதமன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மேகநாதன், பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரியசார்லஸ், மாவட்ட பிரதிநிதிகள் இராமஇளம்பரிதி, நரசிம்மன், ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கவுசல்யா இளம்பரிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் நடத்தப்பட்ட கிளை கழக கூட்டங்களை நடக்க இருக்கும் கிளை கழக கூட்டங்களை விரைந்து முடித்து அனைத்து கிளை கழகங்களின் தீர்மான புத்தகங்களை தலைமைக் கழகத்திற்கு மாவட்ட கழகம் மூலம் அனுப்பிட உடன் தீர்மான புத்தகங்களை கிளை செயலாளர்கள் ஒன்றிய திமுகவிடம் உடன் ஒப்படைத்திட வேண்டும்.
13 முறை சட்டமன்ற தேர்தலில் நின்று 5 முறை முதல்வராக பொறுப்பு ஏற்று தமிழ் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தந்த கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்ட ஒன்றிய அரசுக்கும், கோரிக்கை வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி மீண்டும் 2026 சட்ட மன்ற தேர்தலிலும் தொடர்ந்திட திமுக அரசின் சாதனைகளை கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளும் இன்றிலிருந்தே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிடுவது என்றும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.