கீழ்வேளூர், ஜூலை 5: கீழ்வேளூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை உதவி செயற்பொறியாளர் (தெற்கு) ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று 5ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கீழ்வேளூர், ஓர்குடி, ஒதியத்தூர், கடம்பங்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.