ஈரோடு, நவ. 22: கீழ்பவானி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, குட்டிபாளையம், செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவருடன், அப்பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனு விவரம்: கீழ்பவானி வாய்க்கால், மேட்டுப்பாளையம் கிளை வாய்க்கால், இரட்டை வாய்க்கல், கடைகோடி வாய்க்கால் பகுதியில் நாங்கள் விவசாயம் செய்டு வருகிறோம். அப்பகுதியில் சிலர் நிலம் வாங்கி, வாய்க்காலை அழித்து, ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர்.
இதனால், நேரடியாக, 35 ஏக்கர் நிலங்களை கொண்டுள்ள 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். இதுகுறித்து, புகார் தெரிவித்தும், நீர் வளத்துறையினர் அளவீடு செய்துவிட்டு கூறுவதாக தெரிவிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் முதல் முயற்சி செய்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.ஆக்கிரமிப்பாளர்களும், அவர்களுடன் சேர்ந்தவர்களும் எங்களை போன்ற விவசாயிகளை மிரட்டி வருகின்றனர். அளவீடு செய்ய வரும் அதிகாரிகளையும் மிரட்டி திருப்பி அனுப்பி விடுகின்றனர். எனவேல், இப்பிரச்னையில், மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.