ஒரத்தநாடு, ஜூன். 25: அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு முகாம். மது ஒழிப்பு சப் இன்ஸ்பெக்டர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை மது ஒழிப்பு அமலாக்கத்துறை பட்டுக்கோட்டையிலிருந்து வருகை தந்த பட்டுக்கோட்டை மது ஒழிப்பு சப் இன்ஸ்பெக்டர் மிலானி மற்றும் தலைமை காவலர் ஜெலிஸ் ஆகியோர் போதை பொருளினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் மற்றும் அதன் மின் வளைவுகளை பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தினர். மேலும்18 வயதிற்கும் கீழ் உள்ள மாணவர்கள் இளைஞர்களுக்கு போதை பொருட்களை எந்த ஒரு கடைகளிலும் விற்கக் கடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.
மேலும் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் இருக்க பள்ளி அருகில் உள்ள தனியார் நடத்தும் கடைகளில் போதைப்பொருட்கள் விற்பது தண்டனைக்குரிய சட்டமாகும். மேலும் கிராமங்களில் நடைபெற்று வரும் கடைகளில் பள்ளி சிறார்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போன்றவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்கப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் போதை பொருளுக்கு அடிமையாகாமல் இருக்க பிள்ளைகளை பெற்றோர்கள் ஊர்ந்து கவனிக்கவும்.
அதேபோன்று பள்ளியில் ஆசிரியர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. பள்ளி பாடத்தோடு சேர்த்து மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வையும் போதிக்க வேண்டும் என இந்நிகழ்ச்சியில் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமை ஏற்றார், உதவிதலைமை ஆசிரியர் திருக்குமரன் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், திருமங்கலக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சுரேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சேகர், முன்னாள் கூட்டுறவு சங்க ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் பள்ளியின் முதுகலை ஆசிரியர் ஆறுமுகம் நன்றி தெரிவித்தார்.