குளத்தூர்,ஆக.17: கீழவைப்பார் இராக்கினிமாதா ஆலய திருவிழாவில் தேர்பவனி விமரிசையாக நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அடுத்த ஏழு கடற்கரையின் 2ம்துறை கீழவைப்பார் புனித இராக்கினிமாதா ஆலயத்தில் 467ம் ஆண்டு திருவிழா கடந்த 6ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் விமரிசையாக நடந்தது. திருவிழா நாட்களில தினமும் காலை, மாலை ஆராதனை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பங்குத்தந்தைகள் மரியதாஸ்லிப்டன், மெரிஸ்லியோ, மறை மாவட்ட செயலாளர் ஜெகதீசன், வளன், சுதர்சன், ராஜன், டைட்ஸ்ரோஷன், ஜெயந்தன், திலகராஜா, டோம்னிக் அருள்வளன், பிரதீப், கிராசியுஸ், மரியதாஸ், சகாயராஜ் வல்தாரிஸ், வினித்ராஜா, பிரதிஸ்கற்றார், ரினோ, ரோஷன், சகாயஜோசப், உபர்ட்டஸ், அமலன், ராஜன், ஜெகதீசன், ரஞ்சித்குமார், சந்தீஸ்டன், ஜெயகர், ரோஷன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். 10ம் நாளான நேற்று முன்தினம் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து இராக்கினிமாதா சொரூபத்துடன் கீழவைப்பார், சிப்பிகுளம் முக்கிய வீதிகளில் தேர்பவனி விமரிசையாக நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கீழவைப்பார் பங்குத்தந்தை மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கீழவைப்பார் இராக்கினிமாதா ஆலய திருவிழாவில் தேர் பவனி
previous post