சுரண்டை, ஆக. 31: சுரண் டை அருகே கீழ வீராணம் ஊராட்சியில் ரூ.33.60 லட்சம் மதிப்பில் முத்துப்பேட்டை தெரு, பள்ளிவாசல் வடக்கு தெரு, அலியார் நகர், பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். வீராணம் திமுக கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி துணைத் தலைவர் ஜமீலாபீவி காஜாமைதீன், ஜமாஅத் தலைவர் மியாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராகஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு வீட்டு குடிநீர் இணைப்பை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜிந்தா மதார், வக்கீல் சாகுல் ஹமீது, முகமது உசேன், சதாம் உசேன், அன்சார் அலி, முஸ்தபா கமால், அமானுல்லா, முகமது இஸ்மாயில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரியா, மாரியப்பன், சாகுல் ஹமீது, சுமையா மரியம், முகம்மது அனிபா, ஞான தாஸ், பிரபு தேவா, ஜெயலட்சுமி, சூர்யா, வேல்முருகன், புஷ்பா, ஊராட்சி செயலர் பாண்டியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழவீராணம் ஊராட்சியில் ரூ.33.60 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
previous post