அரியலூர், ஜூலை 6. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து நாசமானது. கீழப்பழுவூர் அடுத்த வல்லகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் வயது (40). இவர், அதே கிராமத்தில் உள்ள தனது வயல் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் உள்ள கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இது குறித்து அரியலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் எங்கும் பரவாமல் அணைத்தனர்.