கீழக்கரை,ஆக.30: கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் டெமோ டே என்ற தலைப்பில் சுய தொழில் வியாபார சந்தை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமையில், கல்லூரி தொழில் முனைவோர் இயக்குனர் முனைவர் ரோஸி பெர்னான்டோ முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவியர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜாஸ்மின் மலர், முன்னாள் மாணவியர் சங்கத் தலைவர் நஸ்ருல் ஆமீரா, துணை தலைவர் அஸ்மத் ஆசிபா ஆகியோர் மாணவிகளுக்கான சுயதொழில் சந்தையை திறந்து வைத்தனர்.
இந்த சந்தையில் ஒவ்வொரு மாணவிகளும் ஆர்கானிக் முறையில் சோப்பு,பிரஸ்,மெஹந்தி நவதானிய பொருட்கள் கேப்பை,விறகு, அரிசி மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை செய்து விற்பனைக்கு கொண்டு வந்து அசத்தினர். அதனை பொதுமக்கள், முன்னாள் மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் வாங்கி மாணவிகள் சுய தொழிலை ஊக்குவித்தனர். ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் சேக் தாவூத்கான் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.