கீழக்கரை, செப். 21: கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இந்த தொழுகையை இஸ்லாமிய கல்வி சங்கத்தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி முன்னின்று நடத்தினார். கடற்கரை பள்ளி ஜமாத் செயலாளர் ஹமீது ஆஸ்கீன், சங்க நிர்வாகிகள் சுல்பிகார் அலி, ஸஃப்வான், சுஹைல், அசிம் ஆகியோர் ஸைபுல்லாஹ் ஆகியோர் செய்தனர். இஸ்லாமிய கல்வி சங்கம் மற்றும் கடற்கரை பள்ளி ஜமாத் ஏற்பாட்டில் கடற்கரை பள்ளி ஈத்கா திடலில் மழை வேண்டி நடந்த சிறப்பு தொழுகையில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.