கீழக்கரை,ஆக.17: கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனங்களின் சார்பில் 77வது சுதந்திர தின கொடியேற்று விழா நடந்தது. தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தலைமை வகித்து சுதந்திர தின உரையாற்றினார். தெற்கு தெரு முத்தவல்லி உமர் அப்துல் காதர் களஞ்சியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மாணவ,மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தலைமையில் மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.