புதுக்கோட்டை, மே 20: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தனியார் கம்பெனி அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தென் மேற்கு பருவமழையை எதிர்கொள்ள பேரிடர் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. தென் மேற்கு பருவமழையையொட்டி மாவட்டம் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் பேரிடர் மீட்பு ஒத்திகைப் பயிற்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கீரனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தனியார் கம்பெனியில் உள்ள அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் அச்சம் போக்கும் வகையில் பல்வேறு வகையான மீட்பு நடவடிக்கைகள் செய்து காட்டப்பட்டன.
கீரனூர் தீயணைப்பு வீரர்கள் பருவமழை பேரிடர் ஒத்திகை
0