புதுக்கோட்டை, மே 26: கீரனூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியைச் சேர்த்தவர் விவசாயி சரவணன். இவருடைய மனைவி கோமதி (32). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணனும், கோமதியும் நேற்று வீட்டின் அருகே உள்ள போர் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்க வெளியே இழுத்துள்ளனர்.அப்போது எதிர்பாராதவிதமாக கோமதி மீது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதனையடுத்து உறவினர்கள் மீட்டு கீரனூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் பரிசோதனை செய்து ஏற்கனவே கோமதி இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கீரனூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
68
previous post