துரைப்பாக்கம், மே 25: கிழக்கு கடற்கரை சாலையில் பொழுதுபோக்கு மையங்கள், திரையரங்குகள், விடுதிகள், சுற்றுலாத்தலங்கள் உள்ளதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இச்சாலையில் சமீப காலமாக மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் அளித்தனர். அதன்பேரில், கானத்தூர் போலீசார் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திறந்த மாடுகளை பிடித்து வேன்களில் ஏற்றிச் சென்று ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததோடு, இனி மாடுகளை சாலையில் திரிய விட்டால் மாடுகள் திருப்பி கொடுக்க மாட்டாது எனவும், மாட்டின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.
கிழக்கு கடற்கரை சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து அபராதம்
0
previous post