கருங்கல்: கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புகையிலையால் ஏற்படும் நோய்கள், கட்டுப்படுத்தும் வழிமுறைகள், அரசின் திட்டங்கள் குறித்து மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விளக்கினர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஐயப்பன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் குழுவாக இணைந்து கிள்ளியூர், மாங்கரை, தாழக்கன்விளை, முள்ளங்கனாவிளை, கருங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்தனர். இதில் 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.