சிவகாசி, செப்.8: கிரைண்டரில் மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சிவகாசியில் திருத்தங்கல் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் மன்சூரா பேகம்(48). இவர் தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருத்தங்கல் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.