அரூர், ஆக.13: அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது, 75 அடி ஆழ விவசாய கிணற்றை தூர்வாரும் பணியில், நேற்று முன்தினம் மாம்பாடியை சேர்ந்த கனகு(50), ராமு(49), ரத்தினவேல்(60), ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது கிரேன் ரோப் அறுந்து விழுந்ததில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படாமல் தப்பினர். ஆனால் கிணற்றிலிருந்து மேலே வர முடியாமல், 3 பேரும் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி, 3பேரையும் பத்திரமாக கிணற்றிலிருந்து மேலே மீட்டு வந்தனர்.
கிரேன் ரோப் அறுந்து விழுந்து கிணற்றில் தவித்த 3பேர் மீட்பு
previous post