கிருஷ்ணராயபுரம், மே 27: கிருஷ்ணராயபுரம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பழுது சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். கரூர் (நெ) க(ம)ப கோட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப உட்கோட்டம், மற்றும் பிரிவு, வீரியபாளையம் ஊராட்சி பாப்பையம்பாடி பிரிவு சாலை அருகில் மாவட்ட முக்கிய சாலையான மகாதானபுரம் மைலம்பட்டி சாலை பழைய ஜெயங்கொண்டம், பஞ்சப்பட்டி சாலையில் கிமீ 11/2ல் அதிக வாகன போக்குவரத்து காரணமாக சாலையில் ஏற்பட்ட பழுதுகளை தற்காலிகமாக தார் கலவைகளை பயன்படுத்தி பழுதுகளைச் சரி செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் உதவிக்கோட்டப் பொறியாளர். கர்ணன், மற்றும் உதவிப்பொறியாளர். அசாருதீன், ஆகியோர் அறிவுரை வழங்கினர். அதன்படி உதவியாளர் சுகுமார் மேற்பார்வையில் சாலைகளில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை கிருஷ்ணராயபுரம் பிரிவு சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர்