கிருஷ்ணராயபுரம், நவ.17: கிருஷ்ணராயபுரம் அருகே அதிக செலவு என்றாலும் பராம்பரிய முறையில் வயலில் மாடு கட்டி விவசாயிகள் உழவு தொழிலை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சிவாயம் ஊராட்சி பகுதியில் பாரம்பரியம் மாறாமல் விவசாயப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றது.
விவசாய நிலங்களை டிராக்டர் மூலம் பெரும்பாலான விவசாயிகள் இன்றைய காலகட்டத்தில் உழவு ஓட்டி வரும் நிலையில் சிவாய ஊராட்சி, கோவில்பட்டி பகுதியில் பழமை மாறாமல் எருதுகளைக் கொண்டு உழவு ஓட்டி விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். மேலும் ஒரு ஏக்கர் விளை நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு ஓட்டினால் மணிக்கு ரூ.850 மட்டுமே செலவு ஆகும். ஆனால் எருதுகள் மூலம் உழவு ஓட்டுவதற்கு மணிக்கு ரூ.2000 செலவு ஆகும். ஆனாலும் சில விவசாயிகள் எருது கொண்டு விளை நிலத்தை உழுது வருகின்றனர்.