கிருஷ்ணகிரி, மே 27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண், மணல், கற்கள் கடத்தலை கட்டுப்படுத்த வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், காட்டேரி கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமி, சிவம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அர்ச்சனா, ஓசூர் தாசில்தார் குணசிவா உள்ளிட்ட அதிகாரிகள் ஊத்தங்கரை மலையாண்டப்பட்டி, சிவம்பட்டி, ஜி.மங்கலம்- சர்ஜாபுரம் சாலை ஈச்சங்கூர், தாசரிப்பள்ளி ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதிகளில் கேட்பாரற்று நின்ற 4 லாரிகளில் சோதனையிட்டபோது 8 யூனிட் எம்.சாண்ட் மணல், 3 யூனிட் மண், 200 கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை, மத்தூர், பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 லாரிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.