கிருஷ்ணகிரி, செப். 1: இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் பெயர்களை மாற்றிய ஒன்றிய அரசை கண்டித்தும், திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், நேற்று கிருஷ்ணகிரி வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தின் முன், ஒரு நாள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்தி நாராயணன், துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன் மற்றும் சுரேகா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் துணைத் தலைவர் கருணாகரன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.