உடுமலை,மே27: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலை ஒன்றிய 27-வது மாநாடு எலையமுத்தூரில் நடந்தது. பழனிச்சாமி, சசிகலா, சையத் இப்ராகிம் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாநாட்டை சுப்பராயன் எம்பி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இசாக், துணைச் செயலாளர் மோகன்,மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் நதியா,சவுந்தர்ராஜன்,சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநாட்டில் ஒன்றிய செயலாளராக தம்பிராஜ்,துணை செயலாளராக ஆறுமுகம்,பொருளாளராக சுந்தரசாமி மற்றும் 15 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.