கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகருக்கு மேற்கே உள்ள கடலோர மீன்பிடி நகரமான Galaxidi -யில் மாவுப் போர் எனும் விழா நடந்தது. நமது நாட்டின் ஹோலி பண்டிகை போல கொண்டாடப்படும் இந்த விழாவில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியபடி மகிழ்ச்சியுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த விழா 19ம் நூற்றாண்டில் கிரேக்கத்தை ஒட்டோமான் பேரரசு ஆக்கிரமித்த காலத்தில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.