செய்முறைகடாயில் எண்ணெயைச் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய; பெரிய வெங்காயம், சீரகம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய புரொக்கோலி, -பச்சை குடைமிளகாய், பட்டாணியைச் சேர்த்து; வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை, புதினாவைச் சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீரைச் சேர்த்து பட்டாணி, புரொக்கோலியை வேக விடவும். கலவை நன்கு வதங்கியவுடன் வடித்த சாதத்துடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். குறிப்பு * புரொக்கோலி மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறனை அதிகரிக்கும் சக்தி கொண்டது. நோய் எதிர்ப்புச் சக்திக்கு உகந்தது.;