செய்முறை : ஸ்க்விட்டை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டிக்கொள்ளவும். முட்டையை உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். மைதா, கார்ன் ஃபிளவர் மாவினை ஒன்றாக கலந்துக் கொள்ளவும். முட்டைக் கலவை மற்றும் வினிகரில் ஸ்க்விட்டை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து ஸ்க்விட்டை மாவு கலவையில் பிரட்டி எண்ணெய்யில் வறுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் வெண்ணை சேர்த்து அதில் கறுவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் பொரித்து வைத்துள்ள ஸ்க்விட்டை சேர்த்து நன்கு பிரட்டவும். கடைசியில் வறுத்துள்ள பூண்டு மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து சூடாக பறிமாறவும்.