Monday, March 4, 2024
Home » கிரிப்டோ கரன்சி முதலீடு உட்பட ஆன்லைனில் 7 பேரிடம் ரூ.2.78 லட்சம் மோசடி

கிரிப்டோ கரன்சி முதலீடு உட்பட ஆன்லைனில் 7 பேரிடம் ரூ.2.78 லட்சம் மோசடி

by Ranjith

 

புதுச்சேரி, பிப். 12: புதுச்சேரியில் கிரிப்டோ கரன்சி முதலீடு உட்பட 7 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.2.78 லட்சத்தை மோசடி கும்பல் பறித்துள்ளது. கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று தெரியாத நபர் கூறியதை நம்பி புதுச்சேரியை சேர்ந்த பிரவீன் என்பவர் ரூ.58 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார். பிறகு, எந்த பணமும் வராமல் ஏமாந்துள்ளார். ஐயப்பன் என்பவர் யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலம் தெரியாத நபருக்கு தவறுதலாக ரூ.15,600 அனுப்பியுள்ளார்.

புதுச்சேரியை சேர்ந்த சடகோபன் என்பவரின் மனைவியிடம் ஆன்லைனில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஒரு திட்டத்தை தெரியாத நபர் கூறியிருக்கிறார். இதை நம்பி அவரும் ரூ.84,301ஐ முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடித்துள்ளார். அதன் பிறகு, எந்த பணமும் வராமல் ஏமாந்துள்ளார். ஆரோக்கியதாஸ் என்பவரிடம் தெரியாத நபர் வங்கி அதிகாரிகள் போல் பேசியுள்ளார். அப்போது, காலாவதியான ஏடிஎம் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பெற்றுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு ஆரோக்கியதாஸின் வங்கி கணக்கில் இருந்து ரூ.24,699 மோசடியாக எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல், நிஜாமுதீன் என்பவருக்கு கிரெடிட் கார்டு ரிவார்ட்ஸ் பாயிண்ட் பெறுவது தொடர்பாக ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதிலிருந்த லிங் மூலம் உள்ளே சென்று ஓடிபி எண்ணை பதிவிட்ட சிறிது நேரத்தில் கிரெடிட் கார்ட்டில் இருந்து ரூ.49,998 மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. விஜயகுமாரி என்ற பெண் யூடியூப்பில் சென்று பகுதி நேர வேலை தொடர்பான வீடியோக்களை பார்த்துள்ளார்.

அப்போது, பார்க்கர் பேனா பேக்கேஜிங் வேலை குறித்த வீடியோ ஒன்றை பார்த்துள்ளார். பின்னர், யூடியூப்பில் காட்டப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரியாத நபரிடம் பேசியபோது, இப்பணிக்கான மூலப்பொருளை பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதை நம்பி அவரும் ரூ.6,050ஐ செலுத்தி ஏமாந்துள்ளார்.

மேலும், ஆதார் பேமென்ட் எனேபிள் சிஸ்டம் மூலம் ஜெயபாலகோகுலன் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.39,500 மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக புதுவையில் 7 பேரிடம் ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 148ஐ மோசடி கும்பல் சுருட்டியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசார் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

eight − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi