சிவகங்கை, ஆக. 14: மாவட்டம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கிராவல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கலெக்டர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் சட்டநாதன் தலைமையில் அதிகாரிகள் பல்வேறு கிராவல் குவாரிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின் போது அரசால் அனுமதிக்கப்பட்ட அளவு, டிரிப்சீட்டு, அனுமதிச்சீட்டு ஆகியவை குறித்து சரி பார்த்தனர்.விதிமீறல்கள் தொடர்பாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட கிராவர் குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என கனிம வளத்துறை உதவி இயக்குநர்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.