திருக்கழுக்குன்றம், மே 19: அணு சக்தி பள்ளிகளில் பாரபட்சமின்றி சுற்றுபுற கிராம மக்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்க கோரி கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் அணுமின் நிலைய கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சதுரங்கபட்டினம் மற்றும் புதுப்பட்டினம் பகுதிகளில் உள்ள அணுசக்தி பள்ளிகளில் நெய்குப்பி, நரசங்குப்பம், ஆமைப்பாக்கம் ஆகிய கிராம மாணவர்களின் \”கல்வி பெறும் உரிமை சட்டம்\” (ஆர்டிஇ) விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளப்படாது என பள்ளிகளின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கண்டிக்கும் வகையில், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய் மற்றும் கல்பாக்கம் சுற்றுப்புற கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் அனுபுரம் நுழைவு வாயில் பகுதியில் நேற்று தங்களது வாயில் கருப்பு துணி கட்டி அடையாள கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுப்புற கிராம மக்களின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
72