புதுக்கோட்டை, ஆக.12: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, அன்னவாசல் ஒன்றியத்தில் நாளை நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்து தீர்வு காணலாம் என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர்முகாம் ஊரகப்பகுதிகளில் 11.07.2024 முதல் 10.09.2024 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம். இம்முகாம் 13.08.2024 (நாளை) கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறஉள்ளது. அதன்படி, கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கல்லாக்கோட்டை, மருதன்கோன்விடுதி, அல் ஜாஸ்மின் மஹாலில், நடுப்பட்டி, குளத்தூர், நம்பூரம்பட்டி, பெரியகோட்டை, வீரடிப்பட்டி, பல்லாவரம்பட்டி, கல்லாக்கோட்டை, செங்கம்விடுதி, துருசுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும்,அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மதியநல்லூர் சமுதாயக் கூடத்தில், கோதண்டராமபுரம், பெருமாநாடு, புதூர், சித்தன்னவாசல், பனம்பட்டி, மதியநல்லூர், ஆரியூர், திருவேங்கைவாசல் ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெறஉள்ளது. மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களதுகோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.